திசுக்களை நீட்சியடையச் செய்வதற்கும், தசை இறுக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கும் டைனா டைனமிக் காக் அப் ஸ்ப்ளிண்ட்டானது ஒரு மென்மையான அழுத்தத்தை விட்டுவிட்டு கொடுக்கும்.
பொது விவரங்கள்
மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக நீண்டகால மணிக்கட்டு முடக்கத்தின் பின்னர், தசைப் பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழல்களில், உங்கள் தசையின் வலிமை மற்றும் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சரியான உதவியாக டைனமிக் காக் அப் ஸ்ப்ளிண்ட் செயல்படுகிறது.
தொழில்நுட்ப விவரங்கள்
இதன் சிறப்பம்சங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது
சிறந்த முறையில் பேடிங் செய்யப்பட்டது, உடையாதது, துவைக்கமுடியக்கூடியது, மீண்டும் பயன்படுத்தக்கூடியது மற்றும் சிக்கனமானது
மணிக்கட்டு அழுத்தத்தை சரிசெய்ய உதவும் ஸ்ப்ரிங் அமைப்பானது, தசைசார்ந்த பிரச்சனைகளை சரிசெய்த பின்னரான பிஸியோதெரபி சிகிச்சைக்கு உகந்தது.
டைனா டைனமிக் காக் அப் ஸ்ப்ளிண்ட் பின்வருவனவற்றில் பயனளிக்கக்கூடியது
எலும்புமுறிவுக்குப் பின்னரான நிவாரணம் – முழு வீச்சிலான இயக்கத்தை மீட்டெடுத்து, மூட்டு இறுக்கத்தை குறைக்கிறது.
தீப்புண்கள் – முறையாக குணமடையச் செய்து, சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது
பெருமூளை வாதம் – இயக்கம், சமநிலையை மேம்படுத்தி, தசையின் விறைப்புத்தன்மை மற்றும் அசாதாரண இறுக்கம் போன்ற பிரச்சினைகளை சரிசெய்கிறது
மாறுபாடுகள்
டைனா டைனமிக் காக் அப் ஸ்ப்ளிண்ட் விரல் நீட்டிப்பு உதவியுடன் கிடைக்கிறது
கழற்றி மாட்டக்கூடிய வகையிலான விரல் நீட்டிப்பு உதவியில் மணிக்கட்டின் அழுத்தத்தை சரிசெய்யக்கூடிய ஸ்ப்ரிங் அமைப்பு உள்ளது