Go to Top

ரிஸ்ட் ஸ்பிலின்ட் – டைனா

மணிக்கட்டுக் காயங்கள் பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படக்கூடும். முதன்மையான காரணம் மணிக்கட்டின் தொடர்ச்சியான பயன்பாடு. இது அந்தப் பகுதியில் இருக்கும் தசைநாண்கள் மற்றும் நரம்புகளில் பிசகினை ஏற்படுத்தி, மணிக்கட்டு வலியை ஏற்படுத்தக்கூடும். மற்றொரு பொதுவான காரணம் உடலியல் செயல்பாடுகளின் போதான காயங்கள். கீழே விழும்போது நாம் இயல்பாக செய்யக்கூடிய எதிர்வினை கைகளைத் தரையில் ஊன்றுவது. இது மணிக்கட்டுகளில் எலும்பு முறிவுகள் அல்லது பிற காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

காயம் அல்லது முறிவின் பின்னரான குணமடைதலுக்கு, காயமடைந்த மணிக்கட்டை மீண்டும் பழைய நிலைக்கு வேகமாக மீட்பதற்கு ரிஸ்ட் ஸ்பிலின்ட்களை பயன்படுத்தலாம். அவை மணிக்கட்டுப் பகுதியை நிலைப்படுத்துவதன் மூலமும், அசாதாரணமான வகையில் மூட்டு இடம் பெயர்வதையும், நிலையில் இருந்து மாறுவதையும் தடுப்பதன் மூலமும் இதனைச் செய்யும்.

டைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட் 3 வகைகளில் கிடைக்கிறது:

டைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட்

Wrist Splint – Dyna

மென்மையான நீடித்து உழைக்கக்கூடிய உயர்தரமான எலாஸ்டிக் மெட்டீரியலின் சிறப்பம்சங்கள்:

  • கூடுதல் சப்போர்டுக்கான மற்றும் முறையான பொருத்தத்துக்கான இணக்கமான பால்மர் ஸ்டே

டைனா ப்ரீத் ரிஸ்ட் ஸ்பிலின்ட்

Dyna Breath Wrist Splint
காற்றோட்டமான எலாஸ்டிக் மெட்டீரியலின் சிறப்பம்சங்கள்:
  • இடைவெளியுடன் நெய்யப்பட்டுள்ளதால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
  • உயர்தரமான எலாஸ்டிக் மெட்டீரியலால் செய்யப்பட்டது
  • உறுதியான பால்மர் ஸ்டேக்கள் மூலம் கூடுதல் சப்போர்ட்டை வழங்கக்கூடியது

டைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட் ரிவர்ஸிபிள்

Breath Wrist Splint - Dyna
சிறப்பம்சங்கள்:
  • இடது அல்லது வலது கையில் அணிந்துகொள்ளும் வகையிலான பொதுவான வடிவமைப்பு
  • உயர்தர எலாஸ்டிக் மெட்டீரியலால் செய்யப்பட்டது
  • (சிறந்த) பிடிப்புக்காக உறுதியான பால்மர் ஸ்டேக்கள் கொண்டு கூடுதல் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது
  • பலகீனமான அல்லது காயமடைந்த மணிக்கட்டுகளுக்கான வசதி, அதிகபட்ச சப்போர்ட் மற்றும் அழுத்தத்திற்கு சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.

டைனா ரிஸ்ட் ஸ்பிலின்ட் பின்வருவனவற்றிற்கு உகந்தது

  • மணிக்கட்டு குகை நோய்
  • கோல்ஸின் எலும்பு முறிவு
  • மணிக்கட்டின் இயக்க நிலையைப் பராமரிப்பதற்கு
  • ஆர்த்தரைடீஸ்
  • மணிக்கட்டு தளர்ச்சி

அளவு விவரக்குறிப்புகள்

Circumference Measurement around wristSizeSmall/MediumLarge/X-Large
Wrist circumferenceIn cm14-1919-23