Go to Top

டென்னிஸ் எல்போ பிரேஸ் – டைனா

டென்னிஸ் எல்போ, பக்கவாட்டு எபிகாண்டைல் எனவும் அழைக்கப்படும் இது, முழங்கைக்கு ஆதரவளிக்கும் தசைநார்களில் வீங்கிப் போவதால் அல்லது கிழிந்து போவதால் ஏற்படுகிறது. இது வழக்கமாக (பெரும்பாலும்) டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு ஏற்படுவதால் இந்தப் பெயரைப் பெற்றது. டென்னிஸ் எல்போவில், மணிக்கட்டு மற்றும் கைகளின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக முன்கைப் பகுதியில் உள்ள தசைகளில் இருந்து முழந்கையின் மூட்டுப் பகுதிக்கு நீட்சியடையும் தசை நார்களில் சிறிய அளவில் கிழிந்து போய் வீங்கக் கூடும். விளையாடும்போது வீரர்கள் தாங்கள் கையாளுகின்ற பின்கை உத்தியை மோசமான முறையில் பயன்படுத்துவதன் காரணமாக இது ஏற்படுகிறது.

டென்னிஸ் எல்போ பிரேஸ், டென்னிஸ் காயங்களுக்கு எதிராக உகந்த சப்போர்ட்டை வழங்கக்கூடியது மற்றும் ஒரு பெரும் விளையாட்டின் போது முறையான பொருத்தத்தையும், வசதியையும் உறுதி செய்யக்கூடியது.

டைனா டென்னிஸ் எல்போ பிரேஸ் இப்போது 3 வகைகளில் கிடைக்கிறது

டென்னிஸ் எல்போ பிரேஸ் – டைனா

Tennis Elbow Brace – Dynaடைனா டென்னிஸ் எல்போ பிரேஸ் முன்கை தசைகளை முழங்கையுடன் இணைக்கும் தசைநார்களுக்கு ஆதரவை வழங்கும். இது தசை நார்களில் ஏற்படும் பிறழ்வுகளைக் குறைப்பதற்கு அதிகபட்ச கம்ப்ரஷனை வழங்கும். இந்த பிரேஸில் உள்ள ஒரு வெல்க்ரோ அட்டேச்மெண்ட் மூலம், எந்த அளவிலான முன்கைக்கும் பொருத்திக்கொள்ளலாம். இந்த தயாரிப்பு வலது அல்லது இடது கை இரண்டிலும் பொருந்தக்கூடியது. இந்த பிரேஸை அணிவதால் தசைநார்களின் காயத்தால் ஏற்படும் வலி குறைந்து, தசைநார்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

டென்னிஸ் எல்போ பிரேஸ் எக்ஸ்ட்ரா – டைனா

Tennis Elbow Brace Xtra – Dyna

டைனா டென்னிஸ் எல்போ பிரேஸ் எக்ஸ்ட்ரா டென்னிஸ் காயங்களுக்கான உகந்த சப்போர்ட்டை அளிக்கும். இதன் கூடுதல் நீளமானது விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு முன்னரும் பின்னருமான சிறந்த பொருத்தத்தையும், வசதியையும் அளிக்கும். எந்த அளவிலான முன்கைக்கும் பொருந்தும் வகையில் இந்த பிரேஸில் ஒரு வெல்க்ரோ அட்டேச்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு வலது அல்லது இடது கை இரண்டிலும் பொருந்தக்கூடியது.

டென்னிஸ் எல்போ பிரேஸ் எக்ஸ்ட்ரா – டைனா இன்னோலைஃப்

Tennis Elbow Brace Xtra – Dyna InnoLife

தலைச்சிறந்த தரத்தையும், வசதியையும் அத்தோடு கூடுதலாக அழகிய வடிவமைப்பையும் விரும்புகின்ற பிரீமியம் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும் வகையிலான பிரீமியம் குவாலிட்டி டென்னிஸ் எல்போ பிரேஸ்.

ஈரப்பதத்தை வெளியேற்றி சிறந்த காற்றோட்டத்தை உறுதி செய்யும் வகையிலான காற்றோட்டமான மெட்டீரியல்

இதன் அதிகப்படியான அகலம் முன்கைக்கான கூடுதல் சப்போர்ட்டை வழங்கும்

முன்கையைச் சுற்றி வசதியான முறையில் பொருந்தக்கூடியது மற்றும் பக்கவாட்டு எபிகாண்டைல் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும்

எந்த வகையான டென்னிஸ் எல்போ பிரேஸை பயன்படுத்தலாம் என்பதற்கான அறிகுறிகள்:

  • டென்னிஸ் எல்போ (பக்கவாட்டு எபிகாண்டைலைட்டீஸ்)
  • கோல்ஃபர்ஸ் எல்போ

Size specificationOne size fits most
In cmLength:33.5 cm x Width:9.5 cm

அளவு விவரக்குறிப்புகள்: அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு
சென்டிமீட்டர்களில் நீளம்:33.5 செமீ x அகலம்:9.5 செமீ