skip to Main Content
Domestic: 1-800-102-7902 | Export: +91 89434 34712
+91-7356115555 | Mon-Sat 9am-5pm IST

TECHNICAL DETAILS     |     SIZE     |    DIRECTIONS FOR USE     |    BUY NOW

GENERAL DETAILS

ஒரு சர்ஜிகல் டிரஸ்ஸின் (ஹெர்னியா பெல்ட் எனவும் அழைக்கப்படுகிறது) நோக்கம்

ஹெர்னியாவை தற்காலிகமான முறையில் நிர்வகிப்பதற்கு ஒரு சர்ஜிகல் டிரஸ் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் அறுவைசிகிச்சைதான் இதற்கான சிறந்த நிரந்தமான தீர்வு. ஹெர்னியா என்பது ஓர் உள்ளுருப்பில் ஏற்படும் வீக்கம் ஆகும், உதாரணத்திற்கு அடிவயிற்றுச் சுவரின் ஒரு வலுவிழந்த பகுதியின் வழியே இரைப்பை குடல் வீக்கம் வெளியே தெரிதல். அடிவயிற்று சுவர் முழுமையாக மூடிய நிலையில் இல்லாதிருக்கும்போது, பிறக்கும்போதே ஹெர்னியா ஏற்படலாம். மேலும் வயதாவதன் காரணமாகவோ மனஅழுத்தம் மிகுந்த உடல் இயக்கத்தின் காரணமாகவோ முதுமைக்காலத்தில் இது இன்னும் மோசமடையலாம். “குடலிறக்கம்” என்பது ஒரு பொதுவான வகையான ஹெர்னியா ஆகும். இதில் நிமிரும்போதோ, பொருட்களை தூக்கும்போதோ அல்லது இருமும்போதோ பொதுவாக சிறிது வலி காணப்படும்.

ஒரு சர்ஜிகல் டிரஸ் அல்லது ஹெர்னியா பெல்ட்டைப் பயன்படுத்தினால், ஹெர்னியாவினால் ஏற்படும் சிரமம் சற்று குறையும், அதாவது உங்களால் ஹெர்னியாவை (குடலிறக்கம்) மீண்டும் அடிவயிற்றுக்குள் அழுத்தித் தள்ளமுடியும். மேலும், சர்ஜிகல் டிரஸ்ஸை அணிவது அந்தப் பகுதியில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தி ஹெர்னியா மீண்டும் வெளியே வருவதை தடுக்கும்.

குடலிறக்கங்கள் அடிவயிற்றுத் தசைகள் வலிவிழப்பதால் ஏற்படுவதில்லை. மாறாக, இது (திசுப்படலங்கள் என்று அழைக்கப்படும்) திசுக்களின் வலுவின்மை காரணமாக ஏற்படுகிறது என்பதால், மேலும் உடற்பயிற்சிகள் செய்வது ஹெர்னியாவை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ செய்யாது. சாத்தியமாக, உடற்பயிற்சியால் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் ஹெர்னியாவை மேலும் மோசமாக்கக்கூடும்.

TECHNICAL DETAILS
  • ஓரளவு குணப்படுத்தத்தக்க குடலிறக்கங்களில் இருந்து டைனா சர்ஜிகல் டிரஸ் மென்மையான நிவாரணத்தை அளிக்கிறது.
  • குடலிறக்கத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வலுவிழந்த தசைகளுக்கு அழுத்தத்தை மென்மையான வகையில் அளிப்பதற்காக இதன் சப்போர்ட்டில் அட்ஜஸ்ட் செய்யத்தக்க (மற்றும் அகற்றத்தக்க) வகையிலான இரண்டு கம்ப்ரெஷன் பேட்கள் உள்ளன.
  • இரண்டு பக்கங்களிலும் ஏற்பட்டுள்ள ஹெர்னியாவுக்கு இதிலுள்ள இரண்டு பேட்களையும் சேர்த்து அணிந்துகொள்ளலாம் மற்றும் ஒரு பக்கம் மட்டும் உள்ள ஹெர்னியாவுக்கு ஒரு பேடை மட்டும் அணிந்துகொள்ளலாம்.கால்ப்பகுதியில் உள்ள மென்மையான ட்யூபுலர் ஸ்ட்ராப்புடன் கூடிய அட்ஜஸ்ட் செய்யத்தக்க வகையிலான ஹிப் ஸ்ட்ராப், பயன்படுத்துபவர் தானே அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிவதை உறுதி செய்கிறது.
  • வெளியே தெரியாத வகையில் பெரும்பாலான ஆடைகளுக்குள் டைனா சர்ஜிகல் டிரஸை அணிந்துகொள்ளலாம்.
VARIATIONS

Available in Small, Medium, Large and X-Large.

Size Available
Circumference of the Hip just below the Waistline

ls-size

SIZESmallMediumLargeX-Large
CMS75-9091-105106-120121-135

Directions for use

டைனா சர்ஜிகல் டிரஸை எவ்வாறு அணியவேண்டும்

மல்லாந்து படுத்துக்கொண்டு ஹெர்னியா வீக்கம் அடிவயிற்றின் உள்ளே செல்லும் வரை மென்மையாக உங்கள் விரல்களால் மசாஜ் செய்து கொடுக்கவும்.

அட்ஜஸ்ட் செய்யத்தக்க வகையிலான சர்ஜிகல் டிரஸை வீக்கம் இருந்த இடத்தில் உங்கள் அடிவயிற்றின் கீழே வைக்கவும். ஹெர்னியா இல்லாத பக்கத்தில் உள்ள கம்ப்ரெஷன் பேடை வேண்டுமென்றால் அகற்றிவிடலாம். ஒரு பக்கம் மட்டும் ஹெர்னியா இருந்தாலும் இரண்டு பேட்களையும் பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இரண்டு பேட்களையும் அணிவது என்பது சமமான அழுத்தத்தை வழங்கி, அழுத்தம் கொடுக்கப்படாத பகுதியில் அதிக சுமை ஏற்படுவதை தடுக்கும்.

மல்லாந்து படுத்தவாறே, எலாஸ்டிக் இடுப்பு பெல்ட்டை உங்கள் உடலின் பின்புறமாக தள்ளி, பெல்ட்டின் வலது முனையில் இருக்கும் வெல்க்ரோ ஸ்ட்ராப்பை பொருத்தவும்.

மல்லாந்து படுத்தவாறே, எலாஸ்டிக் ஸ்ட்ராப்களை உங்கள் கால்களைச் சுற்றி இழுத்து இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள்களை மாட்டவும்.

எழுந்து நின்றுகொண்டு, பேட்களுடன் கூடிய சர்ஜிகல் டிரஸ் உங்கள் உடலில் ஹெர்னியா உள்ள பகுதியில் நேரடியாகப் பொருந்தி வசதியான வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.

டைனா சர்ஜிகல் டிரஸை எவ்வாறு அகற்றவேண்டும்

எலாஸ்டிக் லெக் ஸ்ட்ராப்களில் ஒன்றை கழற்றிவிட்டு மற்றொன்றையும் கழற்றவும்.
இடுப்பு பெல்ட்டில் உள்ள ஹூக்குகளை கழற்றி, உடலில் இருந்து டிரஸை மெதுவாக அகற்றவும்.

துவைப்பதற்கான வழிமுறைகள்

துவைப்பதன் முன்னர் கம்ப்ரஷன் பேட்களை அகற்றி அவற்றை சுத்தமான துணியால் துடைக்கவும். மென்மையான சோப் கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தயாரிப்பை துவைக்கவும். பிழியவோ கசக்கவோ கூடாது. சூரியஒளி அல்லது வெப்பம் படாத இடத்தில் அறை வெப்பநிலையில் காற்றில் உலர்த்தவும். டிரை கிளீன் செய்யவோ அல்லது அயர்ன் செய்யவோ கூடாது.

Indications

Provides gentle relief from reducible inguinal hernia

Related Products

Baby’s umbilical truss

Baby’s umbilical truss

Reduces the hernia by giving an external support to the weakened muscles, Soft material keeps the baby’s  Read More..

Easy 52

Easy 52

ஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின்  மேலும் வாசிக்க

Sterizone

Sterizone

ஸ்டெரிஸோன் போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ் ஓர்  மேலும் வாசிக்க

Sterizone NW

Sterizone NW

Advanced Wound Dressing with Non woven backing surface which protects the wound against extrinsic Read More..

Back To Top